iThinkShare.com

Ads 468x60px

Contributors

Blogroll

About

Blogger news

Sunday 12 May 2013

குழந்தைத் தொழிலாளர்களை எங்கு பார்த்தாலும் தயங்காமல் 1098க்கு போன் செய்யுங்கள்.

iThinkShare

குழந்தைத் தொழிலாளர்களை எங்கு பார்த்தாலும் தயங்காமல் 1098க்கு போன் செய்யுங்கள்.. 

சிறு ஓட்டல்களிலிருந்து பெரிய ஓட்டல்கள் வரை, துணிக்கடைகள்.. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என நாம் செல்லும் செல்லும் இடங்களிலெல்லாம் ஏதோ ஒரு சிறுவனோ சிறுமியோ தங்களின் குடும்ப வறுமைக்காக கல்வியை தொலைத்து பணி புரிந்து கொண்டிருப்பதை குற்றவுணர்ச்சியோடு பார்த்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்..

சிறுவர்களை வேலைக்கு வைப்பதே தவறு என்ற நிலையில் சில இடங்களில் அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தி வேலை வாங்குவது அதிகமாக நடக்கிறது. அந்த மாதிரியான சூழலில் குழந்தைகளை மீட்க விரும்பினால் இந்தியா முழுக்க செயல்படும் 1098 என்ற எண்ணுக்கு தகவல் சொல்லலாம்.

சென்னை பகுதியைச் சேர்ந்த சிறுவர்களை பார்த்தீர்கள் என்றால்
044-260205655, 9962038228 என்ற எண்ணுக்கும் தகவல் மட்டும் சொல்லுங்கள். அவர்கள் வந்து குழந்தை தொழிலாளர்களை மீட்டுச் செல்வார்கள். இதற்காக நாம் செலவு செய்யப்போவது அதிகபட்சம் போனுக்கு ஒரு ரூபாயும் நமது வாழ்நாளின் ஒரு மணிநேரம் மட்டுமே.

அந்த இழப்பின் மூலம் நீங்கள் நாளை உருவாகவிருக்கும் நல்ல தலைவர்களையோ விஞ்ஞானியையோ, டாக்டரையோ ஒரு கலெக்டரையோ ஒரு நல்ல மனிதனையோ காப்பாற்றினீர்கள் என்ற மகிழ்ச்சி கிடைக்கும்.. 

0 comments:

Post a Comment

iThinkShare.com

Plz Share Ur Command Here