iThinkShare.com

Ads 468x60px

Contributors

Blogroll

About

Blogger news

Sunday 30 June 2013

கூகுள் அறிவியல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய மாணவி !

iThinkShare

கூகுள் அறிவியல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய மாணவி !

கூகுள் நிறுவனம் நடத்திய அறிவியல் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் பள்ளி மாணவி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

13லிருந்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் அறிவியல் போட்டி ஒன்றை சில மாதங்களுக்கு முன் கூகுள் நிறுவனம் இணையதளத்தில் நடத்தியது.



இதற்காக, 120 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்பு, திட்டப்பணிகளை அனுப்பி வைத்தனர். இந்த போட்டியில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 பேரின் பெயர்களை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்த பதினோராம் வகுப்பு பயிலும் மாணவி சிரிஷ்டி ஆஸ்தனா இடம் பெற்றுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 23-ம்தேதி அமெரிக்காவில் நடைபெறும் இறுதி சுற்றில் விஞ்ஞானிகள் முன்னிலையில் தனது அறிவியல் திட்டப்பணியை அவர் விளக்க உள்ளார்.

இந்த போட்டியில் வெல்பவருக்கு, 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமல்லாது, நேஷனல் ஜியோகிராபிக் குழுவினருடன் கேலாபாகஸ் தீவுகளுக்கு 10 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி சிரிஷ்டி ஆஸ்தனாவின் அறிவியல் (ப்ராஜக்ட்) திட்டப்பணி என்ன என்பதை அறிய வேண்டுமா..?

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை இயற்கை முறையில் படியிறக்கம் செய்து சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாமல் பயன்படுத்தும் முறையை தான் சிருஷ்டி கண்டுபிடித்துள்ளார்.

0 comments:

Post a Comment

iThinkShare.com

Plz Share Ur Command Here