iThinkShare
இந்த ஆண்டில் ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கும்கி, சுந்தரபாண்டியன், சாட்டை, நீர்ப்பறவை, வழக்கு எண் 18/9 உள்பட 15 படங்கள் தேர்வாகியிருந்தது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பொன்விழா காணும் இயக்குநர் - நடிகர் மணிவண்ணன் கலந்து கொண்டார். அவருடன் ஏராளமான முன்னணி நடிகர்கள், இயக்குநர்களும் பங்கேற்றனர்.இதில் சிறந்த திரைப்படமாக திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குனர் என்.லிங்குசாமி தயாரிப்பில், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ விருது வாங்கியது.
‘சிறந்த இயக்குனர்’ - ‘கும்கி’ படத்தை இயக்கிய பிரபு சாலமனுக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த நடிகர்’ - ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியதற்காக விஜய் சேதுபதிக்கு விருது வழங்கப்பட்டது.
‘சிறந்த நடிகை’ - ‘கும்கி’ படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கு கிடைத்தது.
‘சிறந்த இசையமைப்பாளர்’ - ‘கும்கி’ படத்திற்கு இசையமைத்த D.இமானுக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த தயாரிப்பு நிறுவனம்’ - இயக்குனர் என்.லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ - இயக்குனரும், நடிகருமான மணிவண்ணனுக்கு வழங்கப்பட்டது.
‘தமிழ் சினிமா சின்னம் விருது’ - தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமாருக்கு வழங்கப்பட்டது.
‘சமூக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாயகன் விருது’ - காமெடி நடிகர் விவேக்கிற்கு கிடைத்தது.
சிறந்த புதுமுகம் (பெண்கள் பிரிவில்) - ‘ராட்டினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்வாதிக்கு வழங்கப்பட்டது.
பெரிதும் பாராட்டப்பட்ட படங்களின் பிரிவில்,
சிறந்த திரைப்படமாக பிரகாஷ்ராஜ் இயக்கிய ‘தோனி’ படத்திற்கு விருது கிடைத்தது.
'மிட்நைட் சன் விருதிற்காக' - NTFF தேர்ந்தெடுத்த படம் - பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’.
‘மிகப் பிரபலமடைந்த திரைப்படத்திற்கான விருது’- எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படத்திற்கு கிடைத்தது.
‘சிறந்த சமூக விழிப்புணர்வு விருது’ - அன்பழகன் இயக்கிய ‘சாட்டை’ திரைப்படத்திற்கு கிடைத்தது.
சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்கள் பிரிவில்) – ‘கும்கி’ படத்தில் வரும் (சொய்ங்...சொய்ங்...) எனத் தொடங்கும் பாட
லைப் பாடிய மகிழினி மாறனிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்கள் பிரிவில்) - ‘தோனி’ படத்தில் பிரபுதேவா ஆடியிருக்கும் (வாங்கும் பணத்துக்கும்...) எனத் தொடங்கும் பாடலைப் பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கிடைத்தது.
சிறந்த புதுமுகம் (ஆண்கள் பிரிவில்) - ‘நான்’ படத்தில் நடித்த விஜய் ஆண்டனிக்கு கிடைத்தது.
‘மக்கள் தேர்வு செய்த சிறந்த புது முக நடிகருக்கான விருது’ – ‘ஒருகல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்தது.
‘சிறந்த வில்லன் நடிகர் விருது’ - ‘சாட்டை’ படத்தில் நடித்த தம்பி ராமையாவுக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த துணை நடிகைக்கான விருது’ – ‘ஒருகல் ஒருகண்ணாடி’ படத்தில் உதயநிதிக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்தது.
‘சிறந்த துணை நடிகருக்கான விருது’ - ‘கும்கி’ படத்தில் லட்சுமி மேனன் தந்தையாக நடித்த ஜோ மல்லூரிக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது’ – ‘ஒருகல் ஒருகண்ணாடி’ படத்தில் நடித்த சந்தானத்திற்கு கிடைத்தது.
‘சிறந்த ஒளிப்பதிவாளர்’ – ‘கும்கி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கு கிடைத்தது.
‘சிறந்த எடிட்டர்’ - ‘நடுவுல கொஞ்சம் பக்கத காணோம்’ படத்திற்கு எடிட்டிங் செய்த கோவிந்தராஜிற்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த பாடலாசிரியர்’- பிரகாஷ்ராஜின் ‘தோனி’ படத்தில் (விளையாட்டா படகோட்டி...) எனத் தொடங்கும் பாடலை எழுதிய பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த அசல் திரைக்கதை விருது’- கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய, த்ரில்லர் படமான ‘பீட்ஷாவிற்கு’ கிடைத்தது.
‘சிறந்த கதை’- பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு இந்த விருது கிடைத்தது.
‘சிறந்த நடன அமைப்பாளர்’ – ‘நண்பன்’ படத்தில் வரும் (ஒல்லி பெல்லி…) என்ற பாடலுக்கு நடனம் அமைத்த ஷோபிக்கு இந்த விருது கிடைத்தது.
‘NTFF சிறப்பு ஜூரி விருதுகள்’ - ‘இனியவளே காத்திருப்பேன்’ என்ற படத்தை இயக்கிய ஆஸ்திரேலிய இயக்குனர் ஈழன் இளங்கோவிற்கு கிடைத்தது.
‘2013ன் சிறந்த திரைப்படத்திற்கான சாதனையாளர் விருது’ - சென்னையில் ஒரு நாள் மற்றும் ஹரிதாஸ் படத்திற்கு கிடைத்தது.
2013ம் ஆண்டிற்கான நார்வே தமிழ் திரைப்பட விருதுகள்
தமிழ் சினிமாவை கவுரவிக்கவென்றே ஆண்டுதோறும் நடக்கும் ‘நார்வே தமிழ் திரைப்பட விழா’ நான்காவது முறையாக நடந்து முடிந்தது. இதில் உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம்.இந்த ஆண்டில் ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கும்கி, சுந்தரபாண்டியன், சாட்டை, நீர்ப்பறவை, வழக்கு எண் 18/9 உள்பட 15 படங்கள் தேர்வாகியிருந்தது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பொன்விழா காணும் இயக்குநர் - நடிகர் மணிவண்ணன் கலந்து கொண்டார். அவருடன் ஏராளமான முன்னணி நடிகர்கள், இயக்குநர்களும் பங்கேற்றனர்.இதில் சிறந்த திரைப்படமாக திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குனர் என்.லிங்குசாமி தயாரிப்பில், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ விருது வாங்கியது.
‘சிறந்த இயக்குனர்’ - ‘கும்கி’ படத்தை இயக்கிய பிரபு சாலமனுக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த நடிகர்’ - ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியதற்காக விஜய் சேதுபதிக்கு விருது வழங்கப்பட்டது.
‘சிறந்த நடிகை’ - ‘கும்கி’ படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கு கிடைத்தது.
‘சிறந்த இசையமைப்பாளர்’ - ‘கும்கி’ படத்திற்கு இசையமைத்த D.இமானுக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த தயாரிப்பு நிறுவனம்’ - இயக்குனர் என்.லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ - இயக்குனரும், நடிகருமான மணிவண்ணனுக்கு வழங்கப்பட்டது.
‘தமிழ் சினிமா சின்னம் விருது’ - தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமாருக்கு வழங்கப்பட்டது.
‘சமூக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாயகன் விருது’ - காமெடி நடிகர் விவேக்கிற்கு கிடைத்தது.
சிறந்த புதுமுகம் (பெண்கள் பிரிவில்) - ‘ராட்டினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்வாதிக்கு வழங்கப்பட்டது.
பெரிதும் பாராட்டப்பட்ட படங்களின் பிரிவில்,
சிறந்த திரைப்படமாக பிரகாஷ்ராஜ் இயக்கிய ‘தோனி’ படத்திற்கு விருது கிடைத்தது.
'மிட்நைட் சன் விருதிற்காக' - NTFF தேர்ந்தெடுத்த படம் - பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’.
‘மிகப் பிரபலமடைந்த திரைப்படத்திற்கான விருது’- எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படத்திற்கு கிடைத்தது.
‘சிறந்த சமூக விழிப்புணர்வு விருது’ - அன்பழகன் இயக்கிய ‘சாட்டை’ திரைப்படத்திற்கு கிடைத்தது.
சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்கள் பிரிவில்) – ‘கும்கி’ படத்தில் வரும் (சொய்ங்...சொய்ங்...) எனத் தொடங்கும் பாட
லைப் பாடிய மகிழினி மாறனிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்கள் பிரிவில்) - ‘தோனி’ படத்தில் பிரபுதேவா ஆடியிருக்கும் (வாங்கும் பணத்துக்கும்...) எனத் தொடங்கும் பாடலைப் பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கிடைத்தது.
சிறந்த புதுமுகம் (ஆண்கள் பிரிவில்) - ‘நான்’ படத்தில் நடித்த விஜய் ஆண்டனிக்கு கிடைத்தது.
‘மக்கள் தேர்வு செய்த சிறந்த புது முக நடிகருக்கான விருது’ – ‘ஒருகல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்தது.
‘சிறந்த வில்லன் நடிகர் விருது’ - ‘சாட்டை’ படத்தில் நடித்த தம்பி ராமையாவுக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த துணை நடிகைக்கான விருது’ – ‘ஒருகல் ஒருகண்ணாடி’ படத்தில் உதயநிதிக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்தது.
‘சிறந்த துணை நடிகருக்கான விருது’ - ‘கும்கி’ படத்தில் லட்சுமி மேனன் தந்தையாக நடித்த ஜோ மல்லூரிக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது’ – ‘ஒருகல் ஒருகண்ணாடி’ படத்தில் நடித்த சந்தானத்திற்கு கிடைத்தது.
‘சிறந்த ஒளிப்பதிவாளர்’ – ‘கும்கி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கு கிடைத்தது.
‘சிறந்த எடிட்டர்’ - ‘நடுவுல கொஞ்சம் பக்கத காணோம்’ படத்திற்கு எடிட்டிங் செய்த கோவிந்தராஜிற்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த பாடலாசிரியர்’- பிரகாஷ்ராஜின் ‘தோனி’ படத்தில் (விளையாட்டா படகோட்டி...) எனத் தொடங்கும் பாடலை எழுதிய பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு வழங்கப்பட்டது.
‘சிறந்த அசல் திரைக்கதை விருது’- கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய, த்ரில்லர் படமான ‘பீட்ஷாவிற்கு’ கிடைத்தது.
‘சிறந்த கதை’- பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு இந்த விருது கிடைத்தது.
‘சிறந்த நடன அமைப்பாளர்’ – ‘நண்பன்’ படத்தில் வரும் (ஒல்லி பெல்லி…) என்ற பாடலுக்கு நடனம் அமைத்த ஷோபிக்கு இந்த விருது கிடைத்தது.
‘NTFF சிறப்பு ஜூரி விருதுகள்’ - ‘இனியவளே காத்திருப்பேன்’ என்ற படத்தை இயக்கிய ஆஸ்திரேலிய இயக்குனர் ஈழன் இளங்கோவிற்கு கிடைத்தது.
‘2013ன் சிறந்த திரைப்படத்திற்கான சாதனையாளர் விருது’ - சென்னையில் ஒரு நாள் மற்றும் ஹரிதாஸ் படத்திற்கு கிடைத்தது.
0 comments:
Post a Comment